ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு!!!
ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலய அபிவிருத்தி சங்க குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 10 ஆம் திகதி ஜமாலியா பாடசாலை கல்வி முன்னேற்றத்துக்காக தரம் ஒன்று முதல் 13 வரையிலான மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபகரண பொதிகளும் பாடக்கொப்பிளும் எஸ் எஸ் எஸ் திருமண மண்டப உரிமையாளர் ஜெர்மனியை வசிப்பிடமாகவும் ஜமாலியாவை பிறப்பிடமாகவும் முன்னாள் ஜமாலியா பாடசாலை பழைய மாணவருமான ஜனாப் முஹம்மத் பரிஸ் என்பவரால் அவரின் உறவினர்கள் மூலம் ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலய நிர்வாகத்தினரிடமும் பாடசாலை அபிவிருத்திச் சங்க குழுமத்திடமும் ஒப்படைக்கப்பட்டது.


