கொரோனா தொற்றினால் இலங்கையில் பதிவான முதல் மருத்துவரின் மரணம்!!!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவரான கயான் தந்தநாராயண இன்று காலை உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
32 வயதான கயான் தந்தநாராயண வைத்தியர், கராபிட்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த முதலாவது மருத்துவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
டாக்டர் கயான் தந்தநாராயண, ராகம வைத்தியசாலையில் பணியாற்றிவந்ததோடு கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
