நாட்டில் மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறும் : ஞானசார தேரர்!!!

நாட்டில் மீண்டுமொரு தாக்குதல் இடம்பெறும் நாள் வெகு தொலைவில் இல்லையென தாம் நம்புவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைககுழவால் எமக்கும் வழக்கும் தொடரப் போவதாக அண்மையில் பிரதான பத்திரிகையொன்றில் செய்தி வௌியாகியிருந்தது.
உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஆணைக்குழுவில் எம்மை குற்றவாளிகளுக்க மக்கள் எதிர்ப்பார்க்கவில்லை, நாம் என்ன தவறு செய்தோம்,. இவ்வாறான விடயங்களுக்கு எமது மக்கள் முகங்கொடுக்க நேரிடும் என்பதை நாம் தொடர்ச்சியாக கூறி வந்தோம், அதே போன்று மீண்டும் இவ்வாறான வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. அடிப்படை்வாத கருத்துக்களால் ஆயுதம் தரித்த குழுக்கள் இதுவரை செயலற்றதாக்கப்படவில்லை. அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதான பிரதான சூத்திரதாரிகள் இன்று வௌியில் இருக்கின்றனர் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்..