திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவர்களின் பெற்றார்களுக்கான அறிவித்தல்!!!!
திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் மாணவர் வரவு மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக கல்லூரியின் அதிபர் அலி சப்ரி அவர்கள் தெரிவித்துள்ளார் .
COVID - 19 கொரோனா அச்சம் காரணமாக மாணவர்களின் வருகை மிகவும் குறைந்துள்ளதாகவும் இதன் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த கல்லூரியின் அதிபர் அலி சப்ரி அவர்கள்.
இது பாடசாலையின் வளர்ச்சியில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டினார்
எனவே எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாணவர்களை கட்டாயம் பாடசாலைக்கு வழமை போன்று அனுப்பி வைக்குமாறு மாணவர்களின் பெற்றோர்களுக்கு கல்லூரியின் அதிபர் அலி சப்ரி அவர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்.
