Header Ads

Breaking News
recent

புர்கா உட்பட முஸ்லிம் விவாக சட்டங்களில் மாற்றம் : நீதி அமைச்சர் அலி சப்ரி !!!!!



இலங்கையில் பொது இடங்களில் முகத்தை மூடும் வகையிலான ஆடை அணிவதற்கு தடை விதிக்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்கள் நேற்று கொழும்பில் இடம்பெற்ற உடகாவியலார்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில...

இதற்கான யோசனை கடந்த நவம்பர் மாதம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதாகவும் .

ஒரு சமூகத்தை மாத்திரம் இலக்குவைத்து அல்லாமல் பொதுவாக தேசிய பாதுகாப்பு கருதி பொது இடங்களில் முகத்தை மூடும் வகையிலான ஆடை அணிவதற்கு தடை விதிக்கப்பட உள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மேலும் இதனை புர்கா தடை என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் முஸ்லிம் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் படிப்படியாக எடுத்து வருகிறது என்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார் .

மேலும் இதனை ஒரே தடவையில் மாற்ற முடியாது. அதற்கான படிமுறைகள் இருக்கின்றன அந்த படிமுறைகளின் அடிப்படையில் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதக்கவும் .

குறிப்பாக முஸ்லிம் விவாக சட்டத்தில் பெண் ஒருவர் திருமணம் முடிப்பதற்கான குறைந்த வயது எல்லை 18 ஆக திருத்தப்படவுள்ளது.

அத்துடன் விவாக ஆவணத்தில் பெண்களும் கைச்சாதிட அனுமதிக்கப்படுவதுடன், ஆண்கள் அனுபவிக்கின்ற சகல உரிமைகளையும் பெண்களுக்கும் வழங்க இந்த திருத்தத்தின் ஊடக நடவடிக்கை எடுக்கப்படுவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரித்தார்.
Powered by Blogger.