இலங்கை அணியின் புதிய தலைவர் தசுன் சானக.?
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டீ20 தொரில் இலங்கை பங்கேற்கவுள்ள நிலையில் இலங்கை அணிக்கு தசுன் சானக தலைவராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பாகிஸ்தானுக்கு எதிரான 20க்கு20 தொடரில் தசுன் சானக இலங்கைக்கு தலைமை தாங்கியதுடன், லங்கா பிரீமியர் லீக் தொடரில் தம்புள்ள வைக்கிங்ஸை அவர் சிறப்பாக
வழிநடத்தி இருந்தார்.
எவ்வாறாயினும் இதுதொடர்பாக சிறிலங்கா கிரிக்கட் இன்னும் உத்தியோகப்பூர்வ அறிவிப்பை
வெளியிடவில்லை.
