Header Ads

Breaking News
recent

விபத்தில் சிறுமி உட்பட இருவர் பலி!!!


மின்னேரியா மற்றும் சப்புகஸ்கந்த ஆகிய பகுதிகளில் வாகன விபத்துகளில் சிக்கி சிறுமியொருவர் உட்பட இருவர் பலியானதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் படி மின்னேரியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹபரண – பொலன்னறுவை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பொலன்னறுவை நோக்கிச்சென்ற லொறி, பாதையை கடக்க முற்பட்ட போது சிறுமி ஒருவரின் மீதுமோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது படுகாமடைந்த சிறுமி பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் உயிரிழந்த நபர் கிரிந்தளை பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுமியொருவரே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இவ் விபத்து தொடர்பில் லொறியின் சாரதியை செய்துள்ளதுடன் மின்னேரியா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை சப்புகஸ்கந்த காவற்துறை பிரிவுக்குட்பட்ட, மாகொல – கிரிபத்கொட வீதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று பாதையை கடந்துச்செல்ல முற்பட்ட பெண்ணொருவரின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது படுகாமடைந்த பெண் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கந்தளை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விபத்தின்போது மோட்டார் சைக்கிளின் ஓட்டுனரும் காயமடைந்து, அவர் றாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்புகஸ்கந் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.