திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத் தலைவரின் உடனடி நடவடிக்கை!!!!

இன்று (24) சகல வைத்தியசாலைகளினதும் சிற்றூழியர்கள் பல அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இது தொடர்பாக வெளியில் நின்று ஒளிப்பதிவு செய்ய திருகோணமலை ஊடகவியலாளர் ஒருவருக்கு வைத்தியசாலை அத்தியட்சகரினால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
வைத்தியசாலை வளாகத்தினுள் அனுமதியின்றி யாராக இருப்பினும் படமெடுக்க முடியாது. ஆனால் குறித்த ஊடகவியலாளர் அரச தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையோடு வெளியில் இருந்து ஒளிப்பதிவு செய்ய வைத்திய அத்தியட்சகரினால் அனுமதி மறுக்கப்பட்டு ஊடக அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டதுடன்.
இது தொடர்பாக குறித்த ஊடகவியலாளர் தனது ஊடகச் செயற்பாட்டுக்கு வைத்திய அத்தியட்சகரால் குந்தகம் விளைவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஊடகவியலாளர் சங்கத் தலைவரிடம் முறையிட்டார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களின் சேவை, ஒழுக்க விதிமுறை,அதிகாரம் போன்றவற்றை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத் தலைவர் வைத்திய அத்தியட்சகரிடம் தெளிவுபடுத்தி ஒளிப்பதிவு செய்து அவ் ஊடகவியலாளருக்கு செய்தி சேகரிக்க அனுமதியை பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது..