Header Ads

Breaking News
recent

ஒட்டகச்சிவிங்கியின் இதயத்தை காதலர் தின பரிசாக கொடுத்த பெண்: வலுக்கும் கண்டனம்!


காதலர் தினத்தன்று ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடி அதன் இதயத்தை பரிசாக கணவருக்கு அளித்த காதலிக்கு கடுமையான கண்டனங்களை பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி காதலர்கள் பரிசுகளை பரிமாறிக்கொள்வது வழக்கம்தான். அன்பை பரிசாக பரிமாறி கொள்ளும் உன்னத நாளில் ஒரு உயிரைக் கொன்று பரிசு வழங்கினால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு சம்பவம் தென் ஆப்பிரிக்காவில் அரங்கேறியுள்ளது. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேட்டையாடும் பெண் ஒருவர் 17 வயது ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடி அதன் இதயத்தை வெட்டி எடுத்து தன் கணவருக்கு பரிசாக வழங்கியுள்ளார்.தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 32 வயதான மெரலைஸ் வான் டெர் மெர்வ் சிறுவயது முதலே வேட்டையாடி வருகிறார் . இவர் சிங்கம், புலி, யானை என 500க்கும் மேற்பட்ட விலங்குகளை வேட்டையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.