Header Ads

Breaking News
recent

பொத்துவில் - பொலிகண்டி பேரணிக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி : ரிஷாத் பதியுதீன் !!!


பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்ட, தமிழ் கட்சிகளின் நடைபவனி ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நன்றி தெரிவித்துள்ளார்.

பொத்துவில்லில் ஆரம்பித்த குறித்த பேரணி இன்றைய தினம் பொலிகண்டியில் நிறைவடைந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்திருந்த வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட மேலும் பல அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் கைக்கோர்ந்த்து, போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க உதவி இருந்தமையும் ரிஷாட் பதியுதீன் தனது நன்றியில் நினைவுகூர்ந்திருந்தார்.

முக்கியமாக குறித்த பேரணியில் பங்கேற்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் தனது நன்றியினை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்திருந்தார்.

சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்தும், கண்டித்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டம், கடந்த 3ம் திகதி ஆரம்பமாகியது.

நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், தொல்பொருள் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பூர்வீக வாழிடங்களை ஏப்பமிடல், பேரினவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் அரசின் போக்குகள், ஜனாஸா எரிப்பு என்பவற்றைக் கண்டித்தே இந்த கண்டன நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.