Header Ads

Breaking News
recent

திருமலையில் முதலாவது Covid - 19 கொரோனா மரணம் பதிவு!!!


திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் இன்று காலை மாவட்டத்தின் முதலாவது Covid - 19 கொரோனா மரணம் இடம்பெற்றதாக கிண்ணியா தள வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அடப்பனவயல்,கிண்ணியா-5, பிரதேசவாசியான 79 வயது நபரே கொரோனா வைரஸ் தாக்கத்தில் மரணமானவராவார்.

கடந்த (19) திகதி தனியார் வைத்தியசாலையில் பரிசோதனைக்கு சென்ற நிலையில் அவ்வைத்தியசாலை மருத்துவரால் அரசாங்க வைத்தியசாலைக்கு செல்லுமாரு பரிந்துறைசெய்யப்பட்ட நிலையில் அதேதினம் மாலை கிண்ணியா தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நீரழிவு,கொலஸ்ரோல்,இதயபாதிப்பு உற்பட்ட நோய்களின் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று அவரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொவிட்19 கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக கிண்ணியா தள வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


மேலும் இன்று காலை 7.45 மணியளவில் குறித்த நோயாளி மரணத்தை தழுவியதாக கிண்ணியா தளவைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் மரணித்த நபரின் உடல் இன்று 1.30 மணியளவில் திருகோணமலை பொது மயானத்தில் தகணம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.