Header Ads

Breaking News
recent

இலங்கையில் google.lk தளம் முடக்கம் – மேலதிக தகவல்கள்!


இலங்கையில் google.lk இணையதளம் உட்பட பல்வேறு வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வாறு முடக்கபட்டுள்ள தளங்கள், மாற்று இணையத்தளம் ஒன்றுக்கு இணைக்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.


குறிப்பாக, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் தொடர்பான கோரிக்கை, உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் அந்த தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விவகாரம், ஊடகசுதந்திரம், முஸ்லீம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுதல், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தீர்வு, தமிழில் தேசியகீதம் பாடப்படுவது நிறுத்தப்பட்டமை, வரலாற்று புத்தகங்களில் தகவல்கள் மாற்றப்பட்டுள்ளமை, வழிபாட்டு தளங்கள் ஆக்கிரமிக்கப்படுதல் மற்றும் நாட்டில் இராணுவமயமாக்கல் நிறுத்தப்படவேண்டும், என பல்வேறு விடயங்கள் அந்த தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, முடக்கப்பட்டுள்ள இணையத்தளங்களை மீட்டெடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே, பயனாளர்கள் 011 4 21 60 61 ஆகிய தொலைபேசி இலக்கமூடாக தொடர்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை முன்வைக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த இணையத்தள முடக்கத்துடன் தொடர்புடையவர்களை கண்டறிவதற்கான ஆய்வுகள் முன்னெடுக்க்பட்டுள்ளதுடன், விசாரணைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
Powered by Blogger.