காணாமற்போன மற்றும் சேதமடைந்த (O/L), (A/L) பரீட்சை பெறுபேறுகளை இவ்வாறு பெறுவது???

காணாமற்போன மற்றும் சேதமடைந்த (O/L), (A/L) பரீட்சை பெறுபேறுகளை
(Results Sheet) எவ்வாறு பரீட்சைகள் திணைக்களத்தில் பெற்றுக்கொள்வது?
கொழும்பு, பத்தரமுல்லையில் உள்ள இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தில் இதற்காக தனியான பிரிவுள்ளது. அங்கு சென்று பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கான கருமபீடம் வேலை நாட்களில் மு.ப. 9.00 – பி.ப. 3.00 மணி வரை திறந்திருக்கும். ஒரே நாள் சேவை மற்றும் சாதாரண சேவை என இரு விதமாக சேவைகள் வழங்கப்படுகின்றன.
ஒரே நாள் சேவை:
கட்டணம் ரூ 600.00
மேலதிக பிரதி ஒவ்வொன்றுக்கும் ரூ300.00
சாதாரண சேவை கட்டணம் ரூ350.00
மேலதிக பிரதி ஒவ்வொன்றுக்கும் ரூ200.00
கொண்டு செல்ல வேண்டிய ஆவனங்கள்:
பாடசாலை பரீட்சாத்தி:
பாடசாலை அதிபரின் உறுதிப்படுத்திய கடிதம் (தோற்றிய வருடம், சுட்டெண், அடையாள அட்டை உறுதிப்படுத்தப்பட வேண்டும்)
தனிப்பட்ட பரீட்சாத்தியாக பரீட்சைக்கு தோற்றியிருப்பின் பரீட்சை சுட்டெண், அடையாள அட்டை , கிராம அலுவலரின் உறுதிப்படுத்திய கடிதம்.
தனிப்பட்ட பரீட்சாத்திகள் சுட்டெண் மறந்தால் பிரச்சனை இல்லை. அடையாள அட்டை பரீட்சைக்கு தோற்றிய ஆண்டு குறிப்பிட்டால் போதுமானது.
இலகுவாக O/L மற்றும் A/L பரீட்சை பெறுபேற்று சான்றிதழ்களை பெற்றுகொள்ளலாம்!
https://doenets.lk/certificate/