Header Ads

Breaking News
recent

சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 129வது ஜனன தினம் நாளை!!!

(வி.ரி.சகாதேவராஜா)
உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர், இராமகிருஸ்ணமிசனின் இலங்கை ஸ்தாபகர் ,முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 129வது ஜனன தினம் நாளை(27)சனிக்கிழமையாகும்.

இதனையொட்டி அவர் பிறந்த காரைதீவு மண்ணில்,இருவேறு பெரு விழாக்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதல் விழா காரைதீவு பிரதான வீதி விபுலாநந்த சதுக்கத்திலுள்ள, சுவாமி விபுலாநந்த அடிகளாரின் திருவுருவச்சிலை முன்றலில் காரைதீவு பிரதேசசபை நடாத்துகின்ற "வியத்தகு வித்தகர் விபுலாநந்தர் " பெருவிழா தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக, வீதி அபிவிருத்திஅதிகார சபையின் கிழக்குமாகாண பணிப்பாளர் பட்டயப்பொறியியலாளர் திருமதி கலைவாணி வன்னியசிங்கம் (காரைதீவின் முதல் பெண் பொறியியலாளர்) கலந்து சிறப்பிக்கவிருக்கிறார்.

இரண்டாவது விழா காரைதீவு விபுலாநந்தா ஞாபகார்த்த பணிமன்றத்தின் ஏற்பாட்டில், மூன்றுகட்டங்களாக சுவாமிகள் பிறந்தமனை வளாகத்தில், தலைவர் வெ.ஜெயநாதன் தலைமையில் நடைபெறவிருக்கிறது.

முதல்கட்டமாக விபுலாநந்த சதுக்கத்திலுள்ள ,சுவாமியின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தல் இரண்டாம் கட்டமாக சுவாமிகள் பிறந்தவீட்டிலுள்ள, திருவுருச்சிலைக்கு மலர்மாலை புஸ்பாஞ்சலி நிகழ்வுகளைத் தொடர்ந்து காரைதீவுமண் இ.கி.மிசனுக்கு அளித்த இருபெரும் துறவிகளின் திருவுருவப் படங்கள் திறந்து வைக்கப்படவிருக்கின்றன.


மூன்றாம் கட்டமாக பிற்பகலில் மணிமண்டபத்தில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெறும். இந்நிகழ்வில் இந்துகலாசார திணைக்களப்பணிப்பாளர் அருளாநந்தம் உமாமகேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கிறார்.
Powered by Blogger.