Header Ads

Breaking News
recent

முதலாவது தடவை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு, எதிர்வரும் 29 திகதி முதல் இரண்டாவது தடவை செலுத்த முடியுமென சுகாதார அமைச்சு தெரிவிப்பு.



நாடளாவிய ரீதியில் தற்போது கொவிட் 19 தடுப்பூசிகள் ஏற்றப்படு வருகின்றது.

அதனடிப்படையில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா கொவிட்-19 தடுப்பூசி, முதலாவது தடவை செலுத்தப்பட்டவர்களுக்கு, எதிர்வரும் 29 திகதி முதல் இரண்டாவது தடவை செலுத்த முடியுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த விடயத்தினை ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜனவரி 29ஆம் திகதி, முதல் தடவை தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு, ஏப்ரல் 29 ஆம் திகதி அளவில் இரண்டாவது தடவை தடுப்பூசி செலுத்தப்படும்.

அத்துடன் குறைந்தளவானோருக்கு இரண்டு முறை தடுப்பூசிகளை ஏற்றுவதனை விடவும், ஒரு முறை அதிகளவானோருக்கு தடுப்பூசியை ஏற்றுவது சிறந்தாகும் என உலக சுகாதார அமைப்பு தற்போது கூறுகின்றது.

இதற்கமைய இரண்டாம் கட்டமாக 5 இலட்சம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Powered by Blogger.