திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் திருகோணமலை மாவட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடைபெற்ற வினாடி வினா போட்டி!!!
திருகோணமலை மாவட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் (TDUSA) எமது கபிலர் சமூதாய மேம்பாட்டுப் பேரவையின் நிதி அனுசரனையுடன் திருகோணமலை மாவட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களுக்கிடையே கடந்த சனிக்கிழமை (13) Do You Know Quiz Final வினாடி வினா போட்டியானது தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழகம் திருகோணமலை வளாக தகவல் தொழில்நுட்ப விஞ்ஞான பீட சிரேஸ்ர விரிவுரையாளர் திரு.S.தட்சனாமூர்த்தி அவர்களும், கௌரவ விருந்தினராக திருகோணமலை உதவி மாவட்ட செயலாளர் திரு.N.பிரதீபன் அவர்களும், எமது கபிலர் நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.S.வசந்தநேசன் அவர்களும் கலந்து கொண்டதோடு போட்டிக்கான பாடசாலையைச் சேர்ந்த அதிபர்கள்¸ ஆசிரியர்கள்¸ மாணவர்கள்¸ மற்றும் பெற்றோர்களும் கலந்து இந்நிகழ்வினை சிறப்பித்தனர்.
இவ் வினாடி வினாப்போட்டியானது கணித விஞ்ஞான பிரிவு¸ வர்த்தகப்பிரிவு¸ கலைப்பிரிவு¸ தொழிநுட்ப பிரிவு என நான்கு பிரிவுகளில் இடம்பெற்றதுடன் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களினைப் பெற்ற பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அவ்பாடசாலைகளின் சார்பில் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான பரிசில்களும்¸ கௌரவிப்புக்களும் வழங்கப்பட்டன.
இவ்போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலைகளின் விபரம் வருமாறு
கணித விஞ்ஞான பிரிவு
1ம் இடம் - தி/ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி
2ம் இடம் - தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரி
3ம் இடம் - தி/ இ.கி.ச.ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி
வர்த்தகப்பிரிவு
1ம் இடம் - தி/ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி
2ம் இடம் - தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரி
3ம் இடம் - தி/ இ.கி.ச.ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி
கலைப்பிரிவு
1ம் இடம் - தி/ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி
2ம் இடம் - தி/கலைமகள் மாக வித்தியாலயம்
3ம் இடம் - தி /மெதடிஸ்த மகளிர் கல்லூரி
தொழிநுட்ப பிரிவு
1ம் இடம் - தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரி
2ம் இடம் - தி/ விபுலானந்தா கல்லூரி
3ம் இடம் - தி/ நிலாவெளி கைலேஸ்வர கல்லூரி