Header Ads

Breaking News
recent

யாழ்ப்பாணத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு!!!



யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாண கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலைமை அதிகரித்து வரும் நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும் அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்டவர்களிடம் கலந்துரையாடியதன் பின்னர், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.