Header Ads

Breaking News
recent

விவசாய நிலம் அன்மைக்காலங்களில் நீர்ப்பாசன திணைக்கள அரச அதிகாரிகளினால் எல்லை இடும் பணிகள் முன்னெடுப்பு!!!



அநுராதபுர மாவட்டம் ஹொரவப்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட வீரச்சோலை மற்றும் தாமராவ கிராம விவசாயிகளின் பூர்விக விவசாய நிலம் அன்மைக்காலங்களில் நீர்ப்பாசன திணைக்கள அரச அதிகாரிகளினால் எல்லை இடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கிராமவாசிகள் கவலை தெரிவித்து வந்த நிலையில்.

இவ் கிராம வாசிகளின் பிரச்சினையை தீர்க்கும் முகமாக அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ இஷாக் ரஹுமான் அவர்களினால் எதிர் வரும் 29 ம் திகதி மக்களுடனான ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலில் பாதிக்கப்பட்ட கிராமவாசிகளை கலந்து கொள்ளுமாறு வேண்டி கொண்டுள்ளதுடன்.

இக் கலந்துரையாடலின் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தீர்க்கமான முடிவை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறியுள்ளார்.
Powered by Blogger.