காட்டுப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை : ஒருவர் கைது!!!

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி காட்டுப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட போது உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை நேற்று வியாழக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த காட்டுப்பகுதியினை முற்றுகையிட்ட போது சட்டவிரோதமாக கசிப்பு மற்றும்
400 லீற்றர் கோடா மீட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைதானவர் கதிரவெளி பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.