Header Ads

Breaking News
recent

கிண்ணியா தள வைத்தியசாலையின் குறைபாடுகளை நீக்க உடனடி நடவடிக்கை எடுங்கள் : கிண்ணியா சிவில் சமூகப்பிரதிநிதிகள்!!!


(முனீஸ் - கிண்ணியா) 
சுமார் ஒரு இலட்சம் பேர் வரை சேவை பெறும் கிண்ணியா தள வைத்தியசாலையில் நிலவும் ஆளணி மற்றும் பெளதீக வளப்பற்றாக்குறை காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமைகளை கிண்ணியா உலமா சபை,சூறா சபை,பள்ளிவாசல்கள் சம்மேளனம்,வைத்தியசாலை அபிவிருத்திக்குழு பிரதிநிதிகள் இன்று (16) கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களை சந்தித்து தெளிவு படுத்தினர்.

இதன் போது ஏற்பட்டுள்ள விசேட நிபுணர் வைத்தியர் பிரச்சினை, காணி கட்டிட பிரச்சினை,பிரசவ காலத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினை என பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

இவற்றை தீர்க்க முடியாதவிடத்து வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

Powered by Blogger.