Header Ads

Breaking News
recent

திருகோணமலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்பு!!!




திருகோணமலை – தம்பலகாமம் பாலம்போட்டாறு பத்தினிபுரப் பகுதியில் உள்ள வயல் நிலத்தை அண்டிய குடியிருப்பு குடிசையில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று மீட்கப்பட்ட சடலம் நல்லூர், மூதூர் எனும் முகவரியை கொண்ட கந்தவேல் இந்திரானி வயது (46) எனவும் தெரியவருகிறது.

தனது கணவன் மற்றும் தாயுடன் வாழ்ந்து வந்துள்ள நிலையில் இவர் கழுத்து கட்டப்பட்ட நிலையில் அரைப்பகுதி உடம்பு தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது கொலையா? தற்கொலையா? என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Powered by Blogger.