கொரோனா தொற்றின் காரணமாக இன்று 06 மரணங்கள் பதிவாகியுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 667 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களின் விபரம்
👉01. பொரலெஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய பெண்.
👉02. கண்டி பிரதேசத்தை சேர்ந்த 85 வயதுடைய பெண்.
👉03. வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய பெண்.
👉04. வெலிமடை பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய பெண்.
👉05. களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய ஆண்.
👉06. நாவலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண்.