Header Ads

Breaking News
recent

மட்டக்களப்பில் 14 மற்றும் 16 வயதான சிறுவர்கள் இருவருக்கு கொரோனோ தொற்றியிருப்பது இன்று சனிக்கிழமை (24) கண்டறியப்பட்டது.



மட்டக்களப்பில் 14 மற்றும் 16 வயதான சிறுவர்கள் இருவருக்கு கொரோனோ தொற்றியிருப்பது இன்று சனிக்கிழமை (24) கண்டறியப்பட்டது.

“அவர்களுடன் சேர்த்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் 997 பேர் கொரோனா தொற்றாளராக இனங்காணப்படுள்ளது ” என மட்டக்களப்பு பிராந்த சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மாணவர்கள் 100 பேருக்கு நேற்று (23) வெள்ளிக்கிழமை அன்டிஜன், பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்று தெரிவித்த அவர், அதில், ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நால்வருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டதையடுத்து இரு வகுப்பறைகள் மூடப்பட்டு 80 ஆசிரிய மாணவர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

“இதனையடுத்து கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்ட ஆசிரியர் பயிற்சி மாணவர்களின் உறவினர்களான 14, 16 இரு சிறுவர்களுக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டு அவர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

இதேவேளை வியாழக்கிழமை மேற்கொண்ட பிசோதனையில் ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டு அவர்கள் வைத்தியசாலைகயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்தார்.
Powered by Blogger.