கடலில் மிதந்துக் கொண்டிருந்த 240 கிலோகிராம் கேரள கஞ்சா!!!

யாழ்ப்பாணத்தில் - மாதகல் கடற்பரப்பை அண்மித்து மிதந்துக் கொண்டிருந்த 240 கிலோகிராம் கேரள கஞ்சா நேற்று (28) கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை கேரள கஞ்சா, கடத்தல்காரர்களினால் இவ்வாறு கடலில் வீசப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி 7.2 கோடி ரூபாவென தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது காணப்படும் கொவிட் பரவல் காரணமாக குறித்த கஞ்சாவை தீயிட்டு எரிக்க நீதிமன்றில் உத்தரவிட்டிருந்தது.

