Header Ads

Breaking News
recent

இன்று மாலை 6.00 மணி முதல் மேலுமொரு பிரதேசம் தனிமைப்படுத்தப் படுத்தப்படுகிறது!


அதிகளவான கொரோனாத் தொற்று பரம்பல் காரணமாக இலங்கையில் மேலும் ஒரு பிரதேசம் இன்று மாலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிகாரிகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று மாலை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது.

இன்று மாலை 6.00 மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரை குறித்த பகுதி தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை, கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவின் நிராவிய கிராம உத்தியோகத்தர் பிரிவு (441) மற்றும் வெல்லவ பொலிஸ் பிரிவின் நிகதலுபொத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு (1185) நேற்று (ஏப்-23) காலை 7.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.