Header Ads

Breaking News
recent

மோட்டார் சைக்கிள் மற்றும் டிமோ பட்டா விபத்து -இருவர் படுகாயம் -ஒருவரின் நிலை கவலைக்கிடம்!!!


(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதியில் உப்பாறு பகுதியில் மோட்டார் சைக்கிள் டிமோ பட்டா மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு இராணுவ சிப்பாய்கள் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் கிண்ணியா கண்டல்காடு இராணுவ முகாமில் கடமையாற்றிய வரும் எம்.ஏ.வீரதுங்க (22 வயது) மற்றும் எல்.ஏ. பியந்த குமார (35 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இராணுவ வீரர்கள் இருவர் அவர்களது படை முகாமில் இருந்து கடற்படை முகாமிற்கு தங்களது பெருநாள் தினத்திற்காக செய்த உணவுப்பொருட்களை மோட்டார் சைக்கிளில் எடுத்துச்சென்று கொடுத்துவிட்டு மீண்டும் தமது முகாமிற்கு வருவதற்கு சென்ற போது நேராக வந்து டிமோ பட்டாவுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த இருவரில் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்டிமோ பட்டா சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
Powered by Blogger.