Header Ads

Breaking News
recent

கிளிநொச்சி வைத்தியசாலை சத்திர சிகிச்சைக்கூட தாதி ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி



கிளிநொச்சி வைத்தியசாலை சத்திர சிகிச்சைக்கூட தாதி ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மொரட்டுவ பகுதியில் காணப்பட்ட முச்சக்கரவண்டி சாரதியுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த தாதி பயணித்தது தொடர்பில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் அவரும், அவரது குடும்பமும் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டனர். திருகோணமலை பகுதியில் உள்ள தாதியின் குடும்பத்தினருக்குக் கடந்த வெள்ளிக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த தாதியின் மாதிரிகள் நேற்று மீண்டும் கோரப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் குறித்த வைரஸானது பரவும் அபாயமற்றது எனவும், தாதி தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் என்பதலால் அச்சம் கொள்ளத் தேவை இல்லை எனவும் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தாதியுடன் நெருங்கிப் பழகிய 7 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளர்களிற்கான சத்திர சிகிச்சை தவிர்ந்து ஏனைய திகதியிடப்பட்ட சத்திர சிகிச்சைகள் 30ஆம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.