வெளிநாடுகளிலிருந்து திரும்புவோருக்கு தனிமைப்படுத்தல் கிடையாது - இராணுவத்தளபதி

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்புவோர் கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் செலுத்திக்கொண்டவர்களாக இருந்தால் அவர்களை கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் பிசிஆர் பரிசோதனை மட்டுமே மேற்கொள்ளப்படும் என இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அத்துடன், தடுப்பூசி எதனையும் பெறாமல், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர் 14 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டின் அறிகுறிகள் 7-10 நாட்களுக்குப் பின்னரே காணப்படுகின்றன.
ஆகையால், வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களை ஏழு நாட்களுக்குப் பிறகு வீடுகளுக்கு அனுப்ப முடியாதென்றும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதைக் கட்டாயமாக்கும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிடுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.