Breaking News : ரிஷாத் பதியுத்தீனை கைது செய்வதற்காக CID யினர் அவரது வீட்டை சுற்றிவளைப்பு - ரியாஜ் பதியுத்தீனும் சற்று முன் கைது.

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்காக சி.ஐ.டியினர் சற்றுமுன் அவரது இல்லத்தை சுற்றிவளைத்துள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் சற்றுமுன் தனது முகநூல் பக்கத்தில் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார் .
மேலும் அவ் காணொளியில் அவர் தெரிவித்ததாவது எந்தவொரு குற்றமும் இழைக்காத அவரை கைது செய்வதற்காக, இன்று அதிகாலை 1.30 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் அவரது வீட்டை சுற்றி வளைத்துள்ளதாகவும் இதேவேளை, ரிஷாதின் சகோதரர் ரியாஜ் பதியுதீனை அவரது வீட்டில் வைத்து சற்றுமுன் சி.ஐ.டி யினர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது
ரிஷாத் பதியுத்தீன் நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்விலும் கலந்துகொண்டிருந்தார். கைது செய்வதாக இருந்தால் பாராளுமன்றத்திலோ அல்லது பாராளுமன்றுக்கு வெளியிலோ வைத்து அவரை கைது செய்திருக்கலாம். ஆனால், தற்பொழுது நடுநிசி வேளையில், பிடியாணை உத்தரவின்றி, குற்றப்புலனாய்வு அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு வந்திருக்கும் சிலர் வீட்டை சோதனையிட்டு, அவரை கைது செய்ய முயற்சிக்கின்றனர்.
ஆகையால், இது ஒரு திட்டமிட்ட அரசியல் பழிவாங்கலாகவே கருதப்படுகின்றதாக மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார்
இது ரிஷாத் பதியுத்தீன் அவர்களின் பேஸ்புக்கிலிருந்து தெரிவிக்கப்பட்ட கருத்து என்பது குறிப்பிடத்தக்கது.