கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் கூடுதலான தொற்றாலரை கொண்ட பெரியாற்றுமுனை கிராம சேவகர் பிரிவில் இன்று காலை குணம் குறிகள் உள்ளவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான அவர்களின் உறவினர்கள் மற்றும் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என பலரையும் வரவழைத்து அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர் 39 அண்டிஜன் பரிசோதனை மேற்கொண்ட போது 16 தொற்றார்கள் இனம் காணப்பட்டார்கள்.அதில் ஒரு கர்ப்பிணி தாயும் உள்ளடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொற்றாலர்களின் எண்ணிக்கையும் மரணத்தின் வீதங்களும் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மக்கள் சுகாதார தரப்பினரின் சுகாதார வழிமுறைகளை கடைபிடித்து நடக்குமாறு கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி கேட்டுக் கொண்டுள்ளார்.