Header Ads

Breaking News
recent

கந்தளாய் தள வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையத்தினை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இன்று (13) பார்வையிட்டார்.



(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையங்களை அதிகரித்து வரும் நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையத்தினை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இன்று (13) பார்வையிட்டார்.

கந்தளாயில் அமைக்கப்பட்டுவரும் இடைநிலை சிகிச்சை நிலையத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்து அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நுவான் கபில அத்துகோரல இதன்போது தெரிவித்தார்.

குறவன் ஆவடி நிலை சிகிச்சை நிலையத்தின் அபிவிருத்தி மற்றும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன் பாண்டிகோரல மற்றும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.ஜீ.எம்.கொஸ்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Powered by Blogger.