Header Ads

Breaking News
recent

14 நாட்களுக்கு முழுமையாக நாட்டை முடக்க கோரிக்கை?


இலங்கையில் இரண்டுவார முடக்க நிலையை அமுல்படுத்தும்படி அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசகராக பேராசிரியர் காமினி பீரிஸ் மற்றும் பேராசிரியர் மலிக் பீரிஸ் ஆகியோர் நீண்ட அறிக்கை ஒன்றை அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அதேபோல கோவிட் ஒழிப்பு இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேயும் நாட்டை முழுமையாக 2 வாரத்திற்கு மூடும்படி கூறியுள்ளார்.

தற்போது உள்ள நிலைமைக்கு மத்தியில் பயணத்தடை, அடையாள அட்டைப்படி அனுமதி என்பது கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வாக அமையாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Powered by Blogger.