திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 5 பேர் மரணித்துள்ள நிலையில் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 5 பேர் மரணித்துள்ள நிலையில் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் இன்று காலை 10 மணியளவில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உட்பட்ட பகுதியில் இரண்டு பேரும், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் மூவரும் மொத்தமாக 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் திருகோணமலை மாவட்டத்தில் 42 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் 373 பேருக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 435 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.
மேலும் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்று 18ஆம் திகதி வரை 795 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.