Header Ads

Breaking News
recent

மாகாணங்களுக்கு 9 பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகங்கள் நியமனம்!!!


இந்நாட்டில் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் முன்னெடுப்பதற்காக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகங்கள் 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்து மாகாணங்களும் சென்று கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து தேவையான வசதிகளை வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் நாடளாவிய ரீதியில் 105 கொவிட் தடுப்பு நிலையங்களில் 19,000 இற்கு அதிகமான கட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.