Header Ads

Breaking News
recent

கிழக்குமாகாணசுகாதாரதிணைக்களத்தில்பணியாற்றும்இருவருக்குகொரோனா!!


கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தில் பணியாற்றும் இரு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் குறித்த அலுவலகத்தில் கொரோனா பரவல் தொடர்பில் அசட்டுத்தனமாக இருப்பதாகவும், இன்னும் அலுவலகத்தில் தொற்று நீக்கும் நடவடிக்கை எடுக்காமல் ஊழியர்கள் தொடர்ந்தும் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

எனவே கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் அறிந்தும் இவ்வாறான கவனயீன நடவடிக்கைகள் மேலும் பலருக்கு கொரோனா வைரஸ் பரவுவதற்கு வழிவகுக்கும்.

அத்துடன், கொரோனா தொற்று தொடர்பில் பொதுமக்களுக்கு சிறந்த வழிகாட்டல்களையும், அறிவுறுத்தல்களையும் வழங்க வேண்டிய இவர்களே இப்படி தவறிழைப்பது வேதனைக்குரியது.

எனவே, உரிய அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு ஏனையவர்களையும் பாதுகாக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்.
Powered by Blogger.