ஒரு இலட்சம் கிலோ கிராம் பூசணிக்காய்களை வைத்து திண்டாடும் விவசாயிகள் - உதவுவார் யாருளர் ?

ஒரு இலட்சம் கிலோ கிராம் பூசணிக்காயினை சந்தை படுத்த முடியாத நிலையில் பூநகரி விவசாயிகள் இருப்பதுடன் ஒரு கிலோ பூசணிக்காயினை 20 ரூபா முதல் 25 ரூபாவுக்குமே விற்க தாயாராக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முலங்காவில் பகுதியில் இருக்கும் விவசாயிகளிடம் ஒரு இலச்சம் கிலோக்கிராம் பூசணிக்காய் இருப்பில் இருப்பதாகவும் கொரோனா நிலைமை காரணமாக தம்புள்ளை சந்தை பூட்டப்பட்டுள்ளமையால் அதனை சந்தைப்படுத்த முடியாத நிலமை காணப்படுவதுடன் அறுவடை செய்யப்பட்ட பூசணிக்காய்கள் பழுதடைவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிற்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் விவசாயிகள் கருத்து தெரிவிக்கும் போது,
பல ஏக்கர் நிலத்தில் பல சிரமத்தின் மத்தியில் கடந்த முறையும் விவசாயம் செய்து கொரோனாவால் பாதிப்படைந்தோம் இம்முறையும் பாரிய நட்டத்திற்கு முகம் கொடுத்துள்ளோம் எனவும் இம்முறை நட்டம் ஏற்பட்டாலும் பரவாய் இல்லை ஒரு கிலோ பூசணிக்காயினை 20 அல்லது 25 ரூபாய்காவுது விற்க தயாராக உள்ளோம் என தெரிவித்தனர்.
