Header Ads

Breaking News
recent

முடக்கப்பட்ட பகுதியிலிருந்து மதுபான போத்தல்கள் மீட்பு!!!


(எம். உதயா)
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள பொகவந்தலாவயில், சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட இரு வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை, இன்றைய தினம் (26) மாலை, பொகவந்தலவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொகந்தலாவ – சிறிபுர பகுதியில், மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவரைக் கைது செய்துள்ளதுடன், அவரிடமிருந்த 83 மதுபான போத்தல்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, டின்சின் பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு சென்ற 20 மதுபான போத்தல்களுடன் ஒருவரை, பொகவந்தலவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் விதிமுறையை மீறி, சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட இருவரையும் வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், அவர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில்ல் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Powered by Blogger.