படகு கவிழ்ந்து பாடசாலை மாணவன் மாயம்-இருவர் மீட்பு!

சீரற்ற காலநிலையை பொருட்படுத்தாமல் படகில் பயணித்த மூவர் விபத்தில் சிக்கிய சம்பவம் காலி மீன்பிடித்துறைமுக அருகே இன்று காலை இடம்பெற்றுள்ளது.
படகு மூழ்கியதில் அதில் பயணித்த 16 வயது பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயிருப்பதாக காலி துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தின்போது உயிருக்குப் போராடிய மேலும் இருவர் காப்பாற்றப்பட்டு கராப்பிட்டிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
காணாமல்போன மாணவனைத் தேடி கடற்படையினரின் சுழியோடிகள் தேடுதலில் ஈடுபட்டிருக்கின்றனர்.