Header Ads

Breaking News
recent

நாட்டில் தொடர்ந்தும் கனமழை – இன்றைய வானிலை..!


எதிர்வரும் நாட்களில் நாட்டின் தென்மேற்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூரியுள்ளது

இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டடை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யுமென எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்தற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசக் கூடும் எனவும் எதிர்வுகூரப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக ஏற்படும் காற்றும் மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Powered by Blogger.