நீதிமன்ற நடவடிக்கைகளை மட்டுப்படுத்த தீர்மானம்!!!

நீதிமன்ற நடவடிக்கைகளை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் யூ.ஆர்.டி.சில்வா தெரிவிக்கின்றார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்படி எதிர்வரும் 3ம் திகதி முதல் 7ம் திகதி வரை சந்தேகநபர்கள் மற்றும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலையாக தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.