அத்தாபெந்திவெவ பிரதேசத்தில் மாடுகளை திருடிச் சென்றமை தொடர்பில் விசாரணை!!!

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-அத்தாபெந்திவெவ பிரதேசத்தில் மாடுகளை திருடிச் சென்றமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மொரவெவ பொலிசார் தெரிவித்தனர்.

வறுமையில் வாழ்ந்து வரும் குடும்பத்தினருக்கு தனவந்தர் ஒருவர் தங்களது அன்றாட ஜீவியத்தை கழிப்பதற்காக பால் மாடுகளை வாங்கிக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு (19) இரண்டு மாடுகளை திருட்டுத்தனமாக லொறியில் கொண்டு சென்ற போது அந்த மாட்டின் கன்று குட்டி உயிரிழந்துள்ள நிலையில் கிடந்ததாகவும் இதேவேளை ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத் ரத்மலை காட்டுப் பகுதியின் ஊடாக இரண்டு மாடுகளையும் கொண்டு செல்லும் போது வயலுக்குச் சென்ற ஒருவர் அவதானித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த லொறியின் சாரதியை கைது செய்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் காட்டுப்பகுதியில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் இரண்டு மாடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது
குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மாடுகள் திருடப்பட்டு வருவதாகவும் மாட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் மாடுகளை திருட்டுத்தனமாக கொண்டு சென்றமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மொரவெவ பொலிசார் தெரிவித்தனர்.