Header Ads

Breaking News
recent

பாராளுமன்றம் இன்று கூடுகிறது!!!



இதற்கமைய முற்பகல் 10.00 மணி முதல் முற்பகல் 11.00 மணிவரையான காலப் பகுதியில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின்கீழான கட்டளை, மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான 04 அறிவித்தல்கள், சேர்பெறுமதி வரி(திருத்தச்) சட்டமூலம், உண்ணடாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றை விவாதத்துக்கு எடுப்பதற்கு கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்ததாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூல விடைக்கான கேள்விகளை முன்வைப்பதற்கும், 27 (2) நிலையியற் கட்டளையின் கீழ் கேள்விகளை முன்வைப்பதற்கும் நேரம் ஒதுக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

இதனைவிட எதிர்க்கட்சியினர் முன்வைத்த யோசனைக்கு அமைய கொவிட்-19 சவால்களுக்கு மத்தியில் நாட்டில் காணப்படும் தற்போதைய நிலைமைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணிவரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக குறிப்பிட்டார்.
Powered by Blogger.