Header Ads

Breaking News
recent

மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள தாழ்வுபாடு கடற்கரையை அண்மித்த கடற்கரை பகுதியில் மிகவும் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.


இந்த சடலத்தை நேற்று திங்கட்கிழமை மாலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று திங்கட்கிழமை மாலை குறித்த கடற்கரை பகுதிக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

அதனையடுத்து இன்று காலை அப்பகுதிக்குச் சென்ற சட்ட வைத்திய அதிகாரி சடலத்தை பார்வையிட்டதோடு, சடலத்தை உடற்கூற்று பரிசோதனையை மேற்கொள்ள மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிநலையில், சடலம் இவது வரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



Powered by Blogger.