தனிமைப்படுத்தப்பட்ட எகுத்தர் நகர் கிராம சேவகர் பிரிவில் சற்று முன் ஒரு மரணம்.

தனிமைப்படுத்தப்பட்ட எகுத்தர் நகர் கிராம சேவகர் பிரிவில் சற்று முன் ஒரு மரணம்.மரணத்தை அறிந்த கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் அவருடைய குழுவும் உடனடியாக அவ் விடத்திற்கு சென்று.உடனடியாக அந்த ஜனாஸாவுக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அண்டிஜன் பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவுடன் அவ் ஜனாஸாவுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பீ.சி.ஆர் மாதிரி பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஜனாசா தற்பொழுது கிண்ணியா தள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.என கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.