Header Ads

Breaking News
recent

மட்டக்களப்பில் கொரோனாவால் இருவர் மரணம்!!!



கரடியனாறு மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வந்த இரு ஆண்கள் நேற்று வெள்ளிக்கிழமை (30) இரவு உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைபெற்று வந்த 57 வயதுடையவர் மற்றும் கரடியனாறு கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .

அதேவேளை கரடியனாறு கொரோனா சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த திருகோணமலையைச் சேர்ந்த ஆண் ஒருவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Powered by Blogger.