Header Ads

Breaking News
recent

இலங்கையில் மேலும் சில கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப் படுத்தப்பட்டன!!!


நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 21 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இரத்தினபுரி மாவட்டத்தின் ரக்வான காவல்துறை அதிகார பிரிவிட்குட்பட்ட டோலேகந்த, ரம்புக்க, கத்லான, தனபெல, இம்புக்கந்த, பொத்துபிட்டிய தெற்கு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான காவல்துறை அதிகாரப் பிரிவிட்குட்பட்ட பனாபொல, குடுபிட்டிய, குடா, தெல்கொட கிழக்கு, தெல்கொட மேற்கு, தவ்கலகம, தன்டாகமுவ, கொஸ்வத்தை, தப்பரஸ்கந்த, வத்துராவ , வெம்பியகொட, வெதகல கிழக்கு, வெதகல மேற்கு மற்றும் தவுகலகம கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை காவல்துறை அதிகாரப் பிரிவிட்குட்பட்ட புனித கும்ஹஸ் தோட்ட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
Powered by Blogger.