Header Ads

Breaking News
recent

கஞ்சாவுடன் திருகோணமலையில் இளைஞரொருவரை கைது!!


(அப்துல்சலாம் யாசீம்)
ஒரு கிலோ 90 கிரேம் கேரளா கஞ்சாவுடன் திருகோணமலையில் இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கைது இன்று (03) மாலை 6 45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை -வரோதய நகர் பகுதியைச் சேர்ந்த சேவியர் கிலின்டன் (23வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அனுராதபுர சந்தியிலிருந்து முச்சக்கர வண்டி ஒன்றில் கஞ்சாவினை கொட்பே பகுதிக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்து கொண்டிருந்தபோது சீனக்குடா பொலிஸ் இணையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்த சீனக்குடா பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.ஜீ.எஸ்.ரனவீர உட்பட அவரது குழுவினர் குறித்த முச்சக்கர வண்டியை சோதனையிட்டபோது அதிலிருந்து ஒரு கிலோ 90 கிரேம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாகவும் விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சீனக்குடா பொலிசார் தெரிவித்தனர்.


Powered by Blogger.