கோவிட் 19 மூன்றாம் அலை தொற்றுப்பரவலின் அதிகரிப்புக்கான தனி நபர் மனப்பாங்கு சார் காரணங்களாக கொத்தணிகளாக இனம் காணப்படும் இடங்கள்,பொது நிகழ்வுகள், களியாட்டங்கள்,சந்தைகள்,அலுவலகங்கள் போன்றவற்றில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதில் மக்களினால் காட்டப்படும் அக்கறையீனமே பாரிய செல்வாக்கு செலுத்துகிறது.சில சமயங்களில் ஆடை கலாச்சாரம் மாற்றுவதில் காட்டும் அக்கறைகூட கை கழுவுதலில் மக்கள் காட்டப்படுவது இல்லை என கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.இந்த காலகட்டத்தில் சுகாதார துறையினருக்கு மக்களின் ஒத்துழைப்புக்கள் பற்றி எமது ஊடக பிரிவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் கருத்து தெரிவித்த அவர் எனக்கு முகக்கவசம் அணிந்தால் மூச்சு முட்டுகிறது, நான் தனியாகவே தான் இருக்கிறேன் என முகக்கவசம் அணியாது விடல் அல்லது எனக்கு தெரிந்தவர்களுடன் இருக்கும் போது முகக்கவசம் தேவையில்லை என எண்ணுதல் பொருத்தமற்ற செயலாகும். எனினும் இனியும் நாம் திருந்தவில்லை என்றால் தொற்று தனது கோர முகத்தை காட்டத் தொடங்கிவிடும்.பொறுப்புள்ள மனிதராவோ நாம் இந்த சமூகத்தில் வாழ வேண்டும். ஆகவே சுகாதார நடைமுறைகளை பேணி நடவுங்கள் என்று கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி கேட்டுக்கொண்டார்.