Header Ads

Breaking News
recent

ஹெரோயினுடன் இருவர் கைது!!!



வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனைப் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் 17 மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்கள் இன்று 05.05.2021ம் திகதி புதன்கிழமை மதியம் 1 மணியளவில் மீராவோடை, எல்லை வீதி வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 17 வயதுடைய நபரிடமிருந்து 400 மில்லி கிராமும், 23 வயதுடைய நபரிடமிருந்து 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 23 வயதுடைய நபர் மறிச்சிக்கட்டி, புத்தளத்தைப் பிறப்பிடமாகவும் மீராவோடையை வசிப்பிடமாகவும் கொண்டவர் என்பதுடன், 17 வயதுடைய இளைஞன் மீராவோடையைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதுடன், இவர்களுடன் தொடர்புபட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

அண்மைக்காலத்தில் வாழைச்சேனை காகித இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் திறமையான செயற்பாடு காரணமாக போதைப்பாவனை மற்றும் போதை வியாபாரத்தில் ஈடுபடுவோர் தொடராக கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.