திருகோணமலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!!!

திருகோணமலை-கந்தளாய் பிரதான வீதி 99ம் கட்டை பகுதியில் வேன் மற்றும் லொறி நேருக்கு நேர் மோதியதில் வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (22) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வேனில் பயணித்த திருகோணமலை கோட்டை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இவ் விபத்துடன் தொடர்புடைய நொடியும் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபரின் சடலம் தற்போது தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.